For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SEBI தலைவர் மீது புதிய புகார்! இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!

04:33 PM Sep 06, 2024 IST | Web Editor
 sebi தலைவர் மீது புதிய புகார்  இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
Advertisement

Wockhardt Ltd நிறுவனத்திடமிருந்து செபி தலைவர் மாதபி புச் வாடகை வருமானம் பெற்றதாக காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அந்நிறுவனத்தின் 5% பங்குகள் சரிந்துள்ளன. இதனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

Advertisement

மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர், அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தாக ஹிண்டன்பர்க் அண்மையில் குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மாதபி மறுத்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாதபி புரி விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் புகார் கூறியது. 2017-ம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சி முன் வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதனிடையே மாதபி புரி புச் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று கோரி மும்பையிலுள்ள செபி தலைமையகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட செபி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் Wockhardt Limited உடன் இணைந்த "Carol Info Services Limited" நிறுவனத்திடமிருந்து மாதபி புச் வாடகை பணமாக ரூ. 2.16 கோடி பெற்றதாக காங்கிரஸின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு தனது நிலத்தை வழங்கியதன் மூலம் வாடகை பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து Wockhardt Limited நிறுவனத்தின் பங்குகள் 5% சரிந்துள்ளன. இதனால் இந்திய பங்குச் சந்தையும் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Tags :
Advertisement