For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#JammuKashmir-ல் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்!

07:13 AM Oct 14, 2024 IST | Web Editor
 jammukashmir ல் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்
Advertisement

ஜம்மு - காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Advertisement

அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த மாநில சிறப்பு அந்தஸ்து பாஜக அரசாங்கத்தால் கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, லடாக் இந்த பிராந்தியத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019 அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, 10 ஆண்டுகளுக்கு பின்பு செப். 18, செப். 25 மற்றும் அக்.1 என 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற்று முடிந்துள்ளது. இதில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனையடுத்து உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். கூட்டணி தலைவராக அவர் பதவியேற்கிறார்.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்.11) ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநரை சந்தித்த உமர் அப்துல்லா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது;

“ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் 73-ஆவது பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, யூனியன் பிரதேசத்தில் அமலில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் 54-ஆவது பிரிவின்கீழ் முதலமைச்சர் நியமிக்கப்படுவதற்கு முன் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement