பிப். 1 முதல் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுமா? - மலையாள நாளிதழ்களின் வெளியான செய்தி உண்மையா?
This News Fact Checked by ‘Boom’
கேரளாவின் முன்னணி செய்தித்தாள்களில் வெளியான முதல் பக்க விளம்பரம், இந்திய அரசாங்கம் பிப்ரவரி 1, 2025 முதல் புழக்கத்தில் இருக்கும் நாணயத்தை தடை செய்து டிஜிட்டல் நாணயத்திற்கு மாறும் என்று மக்களை தவறாக வழிநடத்தும் விதமாக சமூக ஊடகங்களில் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது.
கொச்சியில் உள்ள ஜெயின் பல்கலை. ( தன்னாட்சி பல்கலைக்கழகம்) சார்பாக கேரளா முழுவதும் செய்தித்தாள்கள் ஒரு விளம்பரத்தை வெளியிட்ட பிறகு இந்த கூற்றுக்கள் பரவலாக பகிரப்பட்டன. மாத்ருபூமி, மலையாள மனோரமா போன்ற நாளிதழ்களில் வெளியான தலைப்புச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் ஒரு செய்தி அறிக்கையை ஒத்திருக்கும் விளம்பரங்கள் என்று BOOM கண்டறிந்துள்ளது.
பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எதிர்கால உச்சி மாநாடு 2025' என்ற தலைப்பில் 7 நாள் நிகழ்வுக்காக இந்த விளம்பரம் வெளியானது. செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வெளியான அந்த விளம்பரத்தில் “குட்பை நோட்ஸ்; இப்போது டிஜிட்டல் கரன்சி” என மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. பிப். 1 முதல், இந்தியாவில் அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி நடத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்ததாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில், 'ஆர்பிஐ கவர்னர் டாக்டர் அரவிந்த் குமார்', 'எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி மெஹ்ரா' மற்றும் 'நிதி அமைச்சர் ராஜீவ் சிங்' போன்ற கற்பனையான புள்ளிவிவரங்களையும் மேற்கோள் காட்டியுள்ளது. புழக்கத்தில் இருக்கும் நாணயத்தைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திய பிற நாடுகளுடன் இந்தியா இணையும் என்றும் அது கூறியது. பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில், படிப்படியாக நோட்டுகளை திரும்பப் பெறுவதன் மூலம், அனைத்து பண பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் பணமாக மாற்றும் திட்டத்தை பிரதமர் கூறியதாக விளம்பரம் மேலும் கூறியது. ரொக்கம் வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை வங்கிகள் மூலம் தங்கள் பணத்தை டிஜிட்டல் கரன்சியாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் அந்த விளம்பரம் கூறியது.
விளம்பரம் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் வீடியோக்கள் மற்றும் படங்களைப் பகிர்ந்த பேஸ்புக் இடுகையையும் BOOM கண்டது. இவை மங்கலம், சந்திரிகா, சிராஜ், கேரள கௌமுதி, தீபிகா, மாத்யம், சுப்ரபாதம், ஜென்மபூமி மற்றும் வீக்ஷணம் போன்ற கேரள நாளிதழ்கள் இடம்பெற்றுள்ளன. பல பயனர்கள் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு கோரிக்கையைப் பகிர்ந்து கொண்டனர்.
மற்ற பயனர்கள் போலிக் கட்டுரையைப் பகிர்ந்து, தற்போதைய அரசாங்கத்தைப் பாராட்டி, நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றுவதற்கான செயல்முறை குறித்து கேள்விகளைக் எழுப்பினர் . 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அரசாங்கம் செல்லாது என்று நவம்பர் 8, 2016 அன்று வெளியிட்ட உத்தரவை நினைவூட்டும் வகையில், இந்த செய்தியை நம்பி பயனர்கள் இந்த திடீர் அறிவிப்பால் பீதியடைந்து, பதிவின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததன் மூலம் அவை வைரலானது.
சம்பந்தப்பட்ட பதிவில் இடம்பெற்ற பதிவை மொழிபெயர்க்க Google லென்ஸைப் பயன்படுத்தினோம், மேலும் கட்டுரைகளில் ஒன்று "குட்பை நோட்ஸ்; இப்போது டிஜிட்டல் கரன்சி" என்று தலைப்பிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம் மற்றும் RBI கவர்னர் 'டாக்டர். அரவிந்த் குமார்', 'எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி மெஹ்ரா' மற்றும் 'நிதி அமைச்சர் ராஜீவ் சிங்'. மேலே குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்தும் கற்பனையே என்பதை கண்டறிந்தோம். இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியும், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனும் உள்ளனர்.
இதேபோல மற்ற கட்டுரைகளின் மொழிபெயர்ப்பில், அவை போலியான கதைகள் என்று காட்டியது. அனைத்து செய்தித் தாள்களின் முதல் பக்கங்களிலும் இது ஒரு மார்க்கெட்டிங் செய்தி எனக் குறிக்கும் அறிவிப்பு மற்றும் மறுப்பு உள்ளதை கண்டறிந்தது. அனைத்து பக்கங்களிலும் ஜெயின் (தன்னாட்சி பல்கலை.) பல்கலைக்கழகத்திற்கான தெளிவாகக் குறிக்கப்பட்ட விளம்பரத்தையும் நாங்கள் கவனித்தோம். மலையாள மனோரமாவில் காணக்கூடிய மறுப்புக்கான ஆங்கில மொழிபெயர்ப்பில், "2050 இல் ஒரு செய்தித்தாளின் முதல் பக்கம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். உண்மை நிகழ்வுகள் அல்லது அறிக்கைகளுடன் ஏதேனும் ஒற்றுமைகள் இருப்பது முற்றிலும் தற்செயலானது. இங்கு வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் உண்மையில்லை. அவை ஜெயின் பல்கலைக்கழகம் அல்லது அதன் துணை நிறுவனங்களின் கருத்துக்களை பிரதிபலிக்கிறது." என குறிப்பிட்டிருந்தது.
ஜெயின் பல்கலை. நிறுவனத்தின் இணையதளத்தில் 'எதிர்கால உச்சிமாநாடு 2025' பக்கத்திற்கு செல்லும் வகையில் QR கோடு குறியீடுடன் இடம்பெற்றிருந்தது. அதில் ஒரு பாடத்திட்டத்தை பற்றிய ஒரு பாக்ஸுக்கு அடுத்ததாக மறுப்பு வைக்கப்பட்டது.
இது கொச்சியில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தின் சார்பாக வெளியிடப்பட்ட விளம்பரம் என்பதை மலையாள மனோரமாவின் முதன்மை ஆராய்ச்சியாளர் மற்றும் வாடிக்கையாளர் உதவிப் பொறுப்பாளர் வேணுகோபாலிடம் பூம் அணுகிது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் "இந்த கட்டுரை 2050 இல் செய்தித்தாள்களின் எதிர்காலம் பற்றிய அவர்களின் கருத்தாகும்," என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும் சில பதிப்புகளில் விளம்பர அம்சம் முதல் பக்கத்திலும், மற்றவற்றில் இரண்டாவது பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
வைரலான இடுகைகளைத் தொடர்ந்து, டாம் எம். ஜோசப் , நிகழ்வின் X பக்கத்தின் வழியாக வீடியோ விளக்கத்தை வெளியிட்டார். ஜோசப் இந்த விளம்பரமானது "எதிர்காலத்திற்காக மக்களை தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆக்கப்பூர்வமான பயிற்சி" என்றும், மறுப்பு இருந்தபோதிலும் வாசகர்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டதாகவும் கூறினார்.
முடிவு :
இந்திய அரசாங்கம் பிப்ரவரி 1, 2025 முதல் புழக்கத்தில் இருக்கும் நாணயத்தை தடை செய்து டிஜிட்டல் நாணயத்திற்கு மாறும் என முன்னணி செய்தித்தாள்களின் வெளியான முதல் பக்க விளம்பரங்களை கொண்ட பதிவு ஒன்று வைரலானது. இது தொடர்பாக பூம் நடத்திய ஆய்வில் அவை கொச்சியில் உள்ள ஜெயின் பல்கலை. சார்பாக எதிர்கால செய்தித்தாள் எப்படி இருக்கும் என்பது குறித்த சித்தரிப்பு விளம்பரம் என்றும் உண்மையல்ல என்றும் கண்டறிந்தது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.