Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கட்சிகளின் முழக்கமாகும் மாநில உரிமை - தேர்தல் களத்தில் வாக்காக மாறுமா...?

01:45 PM Feb 29, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் எழுப்பும் முழக்கங்களும் அவற்றின் முக்கியத்துவமும் குறித்து இப்போது பார்க்கலாம்...

Advertisement

உலக அளவில் அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவின் 18வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி என இருமுனைப் போட்டி பெரும்பான்மை மாநிலங்களில் உள்ளது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் மும்முனைப் போட்டி உருவாகும் நிலை உள்ளது.

4 முனைப்போட்டியில் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையில் கூட்டணிகளும் நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப்போட்டி உருவாகியுள்ளது. கூட்டணிப் பேச்சுகள், தொகுதிப் பங்கீடு இழுபறிகளுக்கு இடையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் பிரச்சாரக் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பேசு பொருளாகும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையின் முன்னோட்டமாக முழக்கங்களை வெளியிட்டுள்ளனர். அந்த முழக்கங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

திமுகவின் முழக்கம்

திமுக சார்பில் ’உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து மக்களவைத் தொகுதிவாரியாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, திமுகவின் சாதனைகள், மத்திய அரசின் மீதான விமர்சனங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும் வகையில் 'இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்' என்று ’இந்தியாவைக் காக்க #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்’ திண்ணைப் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளனர்.
பேரிடர் பாதிப்புகளின் போது கூட தமிழ்நாடு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அரசாக மத்திய அரசு இருக்கிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சிக்கு இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதிமுக முழக்கம்

தேசிய கட்சிகளோடு கூட்டணி இல்லை. காங்கிரஸ், பாஜக யார் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டைப் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் நடத்துகின்றனர் என்று சொன்ன அதிமுகவின் தேர்தல் முழக்கமாக 'தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம்' என்கிற இலச்சினையாக வெளியிடப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போன்ற வீடியோவும் வெளியிடப்பட்டது. பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. தமிழ்நாட்டு நலனுக்காக நம் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என்கிறார் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி.

நாம் தமிழர்

தமிழின மீட்சியே எமது இலட்சியம் என்று தனித்து களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்து களமிறங்கி வருகிறது. தமிழ், தமிழர், தமிழ் தேசியத்தை முன்னெடுத்து பேசி வருகிறேன். இதை ஏற்று, எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளோடுதான் கூட்டணி என்று சீமான் தெரிவித்துள்ளார். மாநில உரிமை, தமிழ்நாடு உரிமை மீட்பு ஆகிய முழக்கங்கள் நாங்கள் தொடக்கம் முதல் எழுப்பி வருவதுதான். அதை திமுக, அதிமுக இன்றைக்கு எழுப்புகிறார்கள் என்கின்றனர் அக்கட்சியினர்.

பாஜக வியூகம் என்ன?

என் மண் என் மக்கள் நடை பயணத்தை நிறைவு செய்துள்ள பாஜக, மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்கிற வழக்கமான முழக்கத்துடன் மாறப்போகும் தமிழகம் ஆளப்போகும் தாமரை என்கிற முழக்கத்தையும் முன் வைத்துள்ளனர். தமிழ்நாட்டைன் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டை முதன்மை மாநிலம் ஆக்குவோம் என்று பிரதமர் மோடியும் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். திமுக, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்த பிரதமர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நல்லாட்சி செய்ததாக புகழ்ந்துள்ளார்.

இப்படி, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தேர்தல் முழக்கங்கள் தமிழ்நாடு சார்ந்தே இருக்கின்றன. யார் முழக்கம் மக்கள் மனதில் நிற்கும்...? கட்சிகளின் முழக்கங்கள் களத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன? முழக்கம் வாக்காக மாறுமா..? பொருத்திருந்து பார்க்கலாம்....

Tags :
ADMKBJPDMKElection2024MK StalinNarendra modiTN Govtunion govt
Advertisement
Next Article