Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா?

04:35 PM Jul 17, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.  இந்த தொடருக்கான இந்திய அணியில் ஓரிரு நாட்களில் அறிவிக்கப் பட உள்ளது.  இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக தகவல் வெளியாகின.

ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இலங்கைக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களை விளையாட வைப்பதில் ஆர்வமாக உள்ளார்.  தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்திக் பாண்டியா ஒரு நாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  ரோஹித் சர்மா கடந்த மாதம் ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டனாக ஆனார். இவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
#SportsCricketIND vs SLIndiaodiOdi SeriesRohit sharmaSL vs INDSrilanka
Advertisement
Next Article