Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கமல்நாத்தை தொடர்ந்து பாஜகவில் இணைகிறாரா மணீஸ் திவாரி?

06:36 PM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

கமல்நாத்தை தொடர்ந்து மணீஸ் திவாரி பாஜகவில் இணைய உள்ளதாக எழுந்த தகவலை அடுத்து அவரது அலுவலகம் மறுத்துள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என்ற முழக்கத்துடன் பாஜக பணியாற்றி வருகிறது. பாஜகவிற்கு எதிராக இந்திய அளவில் ராகுல் காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் பலர் விலகி வருகின்றனர். கடந்த பிப்.12-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் தனது மகன் நகுல்நாத் எம்.பி.யுடன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

தேர்தலுக்கு முன்பாக இவர்கள் இருவரும் பாஜகவில் சேரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளரும், கமல்நாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகருமான நரேந்திர சலுஜா, கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் புகைப்படத்தை வெளியிட்டு, அதற்கு "ஜெய் ஸ்ரீராம்" என்று தலைப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி.யான நகுல் நாத், தனது அதிகாரப்பூர்வ, எக்ஸ் பக்கத்தில் தனது சுயவிவர குறிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மணீஸ் திவாரியும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை மணிஸ் திவாரி மறுத்துள்ளார். அவரது அலுவலகத்தினர் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளனர். மேலும் அவர் தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags :
BJPCongressKamalnathmadya pradeshManish Tiwari
Advertisement
Next Article