இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் ஜன.22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.
டி20 போட்டிகள் முறையே கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பையிலும், ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் நடக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணிகள் வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணி தேர்வில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.