வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? அயர்லாந்துடன் இன்று மோதல்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டியில் இன்று இந்திய அணி அயர்லாந்துடன் தனது முதல் போட்டியில் சந்திக்கிறது.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்திய அணியின் போட்டி இன்று தொடங்குகிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 8வது லீக் போட்டியில் இந்தியா அணி மற்றும் அயர்லாந்து அணி இன்று களம் காண உள்ளது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணியளவில் இந்த போட்டி தொடங்க உள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா என்று அனைத்து முன்னணி வீரர்களும் இன்றைய போட்டியில் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ஆட்சியமைக்க எந்த கட்சியும் அருதிப்பெரும்பான்மை பெறாத நிலை! கூட்டணி சேர்த்து மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது பாஜகவா? காங்கிரஸா?
அயர்லாந்து அணி சார்பில் பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடைர், ஆன்டி பால்பிர்னி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், மார்க் அடைர், கர்டிஸ் கேம்பர். காரெத் டெலானி. ஜார்ஜ் டாக்ரெல், கிரஹாம் ஹூமே, ஜோஷ் லிட்டில், பாரி மெக்கர்த்தி, பென் ஒயிட், கிரேக் யங் ஆகியோர் விளையாடிவுள்ளனர்.
இந்திய அணி இதுவரை 7 டி20 போட்டிகள் அயர்லாந்துடன் மோதியுள்ளது. அந்த, 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 225 ரன்களும், அயர்லாந்து அணி 221 ரன்களும் எடுத்ததே அதிகபட்சம் ஆகும். முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி முனைப்பு காட்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.