For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா...? - இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!

08:03 AM Nov 02, 2023 IST | Jeni
வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா       இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை
Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன.

Advertisement

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.

அந்த வகையில் நடப்பு தொடரின் 33வது போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து(6) போட்டிகளிலுமே வெற்றியை ருசித்துள்ள இந்திய அணி, 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த வெற்றிக் கணக்கை தொடரும் முனைப்பிலும், அரையிறுதி வாய்ப்பை மேலும் உறுதி செய்யும் வகையிலும் இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

இதையும் படியுங்கள் : இஸ்ரேல் உடனான உறவை துண்டித்தது பொலிவியா - காஸா மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தல்

அதேநேரம், இலங்கை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற இக்கட்டான சுழ்நிலையில் இலங்கை அணி உள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

Tags :
Advertisement