கடைசி டி20 | தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா? இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்ற நிலையில் 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படியுங்கள் : #Maharashtra | வேகமெடுக்கும் ஜி.பி.எஸ் தொற்று… உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணியும், ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து அணியும் போராடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
அணிகளின் விவரம் :
இந்தியா: சஞ்சு சாம்சன் (வி.கீ), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து: பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித் (வி.கீ), ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட், அடில் ரஷித்.