டெல்லியின் 183 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வெற்றியை பதிக்குமா சென்னை அணி?
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகின்ற 17வது லீக் போட்டியில் சென்னை மற்றும் அணிகள் களம் கண்டு வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் சென்னை பவுலிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அஹமது 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, நூர் அஹமது, மதீஷா பத்தீரனா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் சென்னை அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் சென்னை அணி 180 ரன்களுக்கு மேல் எடுக்கும் எதிரணிகளின் ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் பயணித்து வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லி அணியை வீழ்த்தி சென்னை வெற்றிப் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
 
  
  
  
  
  
 