28 ஆண்டுகளுக்கு பின் தலைநகரில் ஆட்சியைக் கைப்பற்றும் பாஜக? வெளியானது Exit Poll முடிவுகள்!
டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்தது. இதில் பதிவாகிய வாக்குகள் பிப்.8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. டெல்லியில் ஆட்சியில் அமர 36 தொகுதிகளில் வெற்றிப் பெற வேண்டும்.
இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், பாஜக 68 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி டெல்லியில் 57.70% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. அதன்படி 28 ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவே ஆட்சியே பிடிக்கும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் குறிப்பிட்ட வெற்றியை பெறாது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம் ஆத்மி ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமா? என கேள்வி எழுந்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்;
P-Marq – கருத்துக்கணிப்புகள்;
ஆம் ஆத்மி - 21-31
பாஜக - 39 -49
காங்கிரஸ் - 0-1
Peoples Pulse – கருத்துக்கணிப்புகள்;
ஆம் ஆத்மி - 10-19
பாஜக - 51-60
காங்கிரஸ் -00
MATRIZE – கருத்துக்கணிப்புகள்;
ஆம் ஆத்மி - 32-37
பாஜக - 35-40
காங்கிரஸ் -0-1
JVC – கருத்துக்கணிப்புகள்;
ஆம் ஆத்மி - 22-31
பாஜக - 39-45
காங்கிரஸ் - 0-2
Chanakya Strategies – கருத்துக்கணிப்புகள்;
ஆம் ஆத்மி - 25-28
பாஜக - 39-44
காங்கிரஸ் - 2-3
Peoples Insight - கருத்துக்கணிப்புகள்;
ஆம் ஆத்மி - 25-29
பாஜக - 40-44
காங்கிரஸ் - 0-1.
கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகி இருந்தது குறிப்பிடதக்கது.