Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை ? -பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த திடீர் அழைப்பு..!

11:50 AM Jun 09, 2024 IST | Web Editor
Advertisement

அண்ணாமலைக்கு அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

Advertisement

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் சுமார் 2 மாத காலம் நடைபெற்றது.  இந்த தேர்தலில் 400 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும்  ஆட்சியமைப்போம் என பாஜக உறுதியாகக் கூறியது.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.  ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை கூட பெற முடியாமல் 240 தொகுதிகளையே பாஜக எட்டியது.

இதனையடுத்து ஆந்திராவில் இருந்து சந்திரபாபு நாயுடு, பீகாரில் இருந்து நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவோடு இன்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே மத்திய அமைச்சரவையும் புதிதாக பதவி ஏற்க உள்ளது. கூட்டணி கட்சினருக்குமுக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சர் பதவிகள் பிரித்து வழங்கப்பட உள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக தோல்வியை தழுவினாலும் பிரதமர் மோடியின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அமைச்சராவார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை சேர்ந்த எல் முருகன், நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவியில் வழங்கப்பட்டது.  இந்த நிலையில் இன்று புதிதாக மத்திய அமைச்சரவை பதவி ஏற்கவேண்டிய நிலையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிதாக பதவி ஏற்க உள்ள உறுப்பினர்களுக்கு இன்று பிரதமர் மோடி தேனீர் விருந்து அளிக்க உள்ளார்.  இந்த விருந்தில் பங்கேற்கும்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  எனவே இன்று மாலை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அண்ணாமலையும் மத்திய அமைச்சராக பதவி ஏற்பார் என தெரிகிறது .

 

Tags :
AnnamalaiBJPpm narendra modiPMO India
Advertisement
Next Article