கண்ணூரில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு!
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே ஆரளம் பண்ணை எனும் வனப்பகுதி உள்ளது. அப்பகுதியில்பழங்குடி மக்களை காட்டு யானை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடி தம்பதிகளான வெள்ளி மற்றும் லீலா ஆகியோர் முந்திரி சேகரிக்கப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
முந்திரி சேகரிப்பை முடித்துவிட்டு மாலை மலை இறங்கும்போது அப்பகுதியில் காட்டு யானை இருவரையும் தாக்கியுள்ளது. யானை தாக்கியதில் இருவரும் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
சமீபகாலமாக கேரளாவில் காட்டு விலங்குகள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதேபோல காட்டு யானை தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. காட்டு விலங்குகளால் மனிதர்கள் மற்றும் விளை நிலங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பழங்குடி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் வனத்துறை அலுவலகம் அருகே நிகழ்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறியும் இறந்தவர்களின் சடலத்தை எடுக்காமல் அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.