“ஆந்திராவைப் போல் கூட்டணியில் உள்ள செல்வப்பெருந்தகைக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏன்?” - #DMDK எல்.கே.சுதீஷ் கேள்வி!
ஆந்திராவைப் போல கூட்டணியில் உள்ள செல்வப்பெருந்தகைக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏன்? என தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, அக்கட்சியின் 20ஆம் ஆண்டு
துவக்க விழா மற்றும் விஜயகாந்திற்கு மத்திய அரசு வழங்கிய பத்மபூஷன் விருது ஆகியவற்றை கொண்டாடும் வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் தேமுதிக முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தேமுதிக கோவை மாவட்ட செயலாளர் சண்முக வடிவேல் தலைமையில் நடைபெற்ற
நிகழ்ச்சியில், தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே சுதீஷ் பங்கேற்று, 500க்கும்
மேற்பட்ட கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவித்தொகை,
தையல் மெஷின், அரிசி பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“மத்திய அரசு வழங்கிய ரூ.4 ஆயிரம் கோடி நிதி, 4 மணிநேர மழைக்கே தாக்குப்பிடிக்கவில்லை. உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியதில் மகிழ்ச்சி. ஆந்திராவை போல் கூட்டணியில் உள்ள செல்வப்பெருந்தகையை ஏன் துணை முதலமைச்சர் ஆக்கவில்லை? . 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுவும், தேமுதிகவும் அமோக வெற்றிப் பெறும். அப்போது எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், பிரேமலதா விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் வருவர். இதே இடத்தில் நம் வெற்றிவிழா நடைபெறும்” என சுதீஷ் பேசியுள்ளார்.