Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காதது ஏன்?... இபிஎஸ் விளக்கம்!

12:58 PM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

“அதிமுக சுயமாக செயல்படவே எந்த தேசிய கட்சிகளுடனும் கூட்டணியில் இணையவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Advertisement

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.நாராயணன் இல்ல விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை விமான நிலையம் வந்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.  ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.  கட்சி ஒரு குடும்பத்திற்கு போகக் கூடாது என்பது தான் நோக்கம்.  தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்.  அதிமுக சுயமாக செயல்படவே எந்த தேசிய கட்சிகளுடனும் கூட்டணியில் இணையவில்லை.  எங்களுடைய கூட்டணி மிக பிரம்மாண்டமாக வெற்றி பெறும்.

தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது.  கருத்து கணிப்பில் ஓட்டு போடும் மக்கள வரவில்லை.  பொருத்திருந்து பாருங்கள்.  அதிமுக- வை பொறுத்தவரை வாக்களிக்கும் மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.  அதுதான் எங்களின் நிலைப்பாடு.

மேகதாது அணை விவகாரத்தில் எங்கு எதை பேச வேண்டுமோ,  அதை பேச திமுக அரசு தவறிவிட்டது.  அதிமுக ஆட்சியில் மேகதாது அணையில் அவதூறு வழக்கு போடப்பட்டது. மேகதாது விவகாரத்தில் இந்த அரசு என்ன செய்யப் போகிறது? மேகதாது அணை விவகாரத்தில் திமுக துரோகம் செய்தது.

திமுக-வின் கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி மக்கள் வாக்களித்தனர்.  இந்த மூன்று ஆண்டு காலத்தில் திமுகவின் ஆட்சியால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.  ஏவி ராஜு பெரிய ஆல் இல்லை.  அவர் திமுகவில் இருந்து வந்தவர்.  அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டவர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், விட்டு வைத்திருந்தோம்.  தற்போது கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags :
AIADMKAV RajuDMKElection2024EPSPalaniswamyParlimentary Elections
Advertisement
Next Article