For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

06:38 PM Dec 05, 2024 IST | Web Editor
வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்    தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
Advertisement

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் சுருக்கெழுத்தர், தட்டச்சர், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தமிழகம் முழுவதும் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை கூடுதல் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், அனுமதிக்கப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் 230 பணியிடங்களில், 11 இளநிலை உதவியாளர்கள், இரண்டு சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் என 13 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை எனவும், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த இரு சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கும், 14 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், தாலுகா நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை சுட்டிக்காட்டி, நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags :
Advertisement