For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெயில் வாட்டி வதைப்பது ஏன்? வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்!

09:02 PM May 03, 2024 IST | Web Editor
வெயில் வாட்டி வதைப்பது ஏன்  வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்
Advertisement

வெயில் வாட்டி வதைப்பது ஏன்? என விளக்கம் அளித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் வெப்ப அலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார்.

அப்போது பாலச்சந்திரன் பேசியதாவது:

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்கள் மே 6 வரை வெப்ப அலை வீசும். அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோன்று வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் இயல் பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

நாளை(மே 4) முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் முதல் 7 நாள்கள் அதிக வெப்பநிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41 - 4 2 டிகிரி செல்சியஸும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 39-40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 - 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

வெப்ப அலைக்கு காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் இல்லை, கோடை மழை குறைந்ததால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு இருந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் தொடங்கி 27 நாள்கள் ஈரோட்டில் தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை மழை பெய்யும்போது வெப்பத்தின் தாக்கல் குறைய வாய்ப்புள்ளது. கரூர், ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தர்மபுரி, ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 - 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 40 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 37.9 டிகிரியும் பதிவாகியுள்ளது.

Advertisement