Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மூன்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது ஏன்? சீமான்!

மூன்று நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்த நீங்கள் இப்பொழுது ஏன் பங்கேற்கிறீர்கள்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
01:40 PM May 24, 2025 IST | Web Editor
மூன்று நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்த நீங்கள் இப்பொழுது ஏன் பங்கேற்கிறீர்கள்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

மறைந்த மூத்த அரசியல் தலைவரும் நாம் தமிழர் கட்சியை தோற்றுவித்தருமான சி.பா. ஆதித்தனாரின் 44வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

Advertisement

"நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுத்தபட உள்ள 234 வேட்பாளர்களில் 134 வேட்பாளர்கள் இளைஞர்களாக இருப்பார்கள், 2026 மாற்று அரசியலை விரும்புகின்ற மக்களுக்கான களம். மூன்று நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்த நீங்கள் இப்பொழுது ஏன் பங்கேற்கிறீர்கள்? இதற்கு முன்கூட்டியே விளக்கம் கூறி இருக்க வேண்டும். ஒருவேளை அமலாக்கத்துறை சோதனைக்காக செல்கிறீர்களா என சந்தேகம் எழுகிறது.

பாஜகவில் இருந்து சந்திரபாபு நாயுடு அல்லது நிதீஷ்குமார் விளக்கினால், திமுக தனது 22 உறுப்பினர்களுடன் ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்பால் இணக்கமாக இருக்கும். பாகிஸ்தான் உடனான இந்தியாவின் போரை ஆதரித்து பேரணி நடத்திய முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். பாஜக கூட அதன் பிறகு தான் நடத்தியது.

பாஜக முதல்வர்கள் பாஜக கூட்டணியில் இருக்கும் முதல்வர்கள் பேரணி நடத்தாத பொழுது நம் முதல்வர் மட்டும் அவசர அவசரமாக பேரணி நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது. முதல்வரின் இந்த செயலில் அரசியல் உள்ளது. இந்த போரில் என்ன நியாயம் இருக்கிறது? தீவிரவாதியை ஊடுருவ விட்டது யார்? தேர்வு எழுதும் மாணவர்களின் மூக்குத்தியை கழட்டி சோதனை செய்கிறார்கள் ஆனால் ஊடுருவும் தீவிரவாதிகளை எப்படி விட்டீர்கள்? இது போரா அக்கப்போரா, இது தேவையில்லை.

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, அதைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. அடுத்தவன் வீட்டுக் கூரை எரிகிறது என நீங்கள் அமைதியாக இருந்தால் நீங்கள் காலையில் சாம்பலாக தான் இருப்பீர்கள், இது சவுக்கு சங்கர் பிரச்சனை மட்டும் இல்லை. துணிந்து உண்மை பேசும் ஒவ்வொருவரின் குரவளையையும் நசுக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiCHIEF MINISTERmeetingsNiti aayogquestionsSeeman
Advertisement
Next Article