For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் கொடுத்த தண்ணீரை வாங்க மறுத்தது ஏன்? - மாணிக்கம் தாகூர் எம்பி விளக்கம்!

03:44 PM Jul 03, 2024 IST | Web Editor
பிரதமர் கொடுத்த தண்ணீரை வாங்க மறுத்தது ஏன்    மாணிக்கம் தாகூர் எம்பி விளக்கம்
Advertisement

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் கொடுத்த தண்ணீரை வாங்காதது ஏன் என மாணிக்கம் எம்பி தாகூர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

18-வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில்,  கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து நேற்று பிரதமர் மோடி பதிலுரையாற்றினார்.

அப்போது நீட், மணிப்பூர் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து சர்வாதிகாரத்தை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.  அப்போது பிரதமர் மோடி மாணிக்கம் தாகூர் எம்பிக்கு தண்ணீர் கொடுத்தார். அதனை மாணிக்கம் தாகூர் வாங்க மறுத்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரதமரிடம் தண்ணீர் வாங்காதது ஏன் என வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில், “நேற்று நாடாளுமன்றத்தில் மணிப்பூர் எம்பி 1 நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் விளைவாக மைய மண்டபத்திற்கு சென்று போராடினோம். அப்போது பிரதமர் மோடி எனக்கு தண்ணீர் வழங்கினார். அவரிடம் தண்ணீருக்கு நன்றி. மணிப்பூர் எம்பியை பேசவிடுங்கள் எனக் கூறினேன். தண்ணீர் வாங்க மறுத்தேன். போராட்டம் தொடர்ந்தது. எங்களைப் பொறுத்தவரையில் மணிப்பூர் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் கேட்பதற்கு பிரதமர் மோடி தயங்குவது ஏன் என்பதுதான்!” என கூறியுள்ளார்.

இது தொடர்பான காணொலியை முழுமையாக காண...

Tags :
Advertisement