For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பழனிவேல் தியாகராஜனை ஐடி துறைக்கு மாற்றியது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

12:24 PM Feb 23, 2024 IST | Jeni
பழனிவேல் தியாகராஜனை ஐடி துறைக்கு மாற்றியது ஏன்    முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம்
Advertisement

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சர் பதவியில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றியதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

Advertisement

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் (UmagineTN) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தபாக்கம் உலக வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி வைத்தார்.  பின்னர்  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :

“1996-ம் ஆண்டு கணினி வாசலை திறந்து வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது ஆட்சிக் காலத்தில் தான் தகவல் தொழில்நுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டது.  கால் நூற்றாண்டுக்கு முன்பே இதை செய்ததுதான் கருணாநிதியின் சாதனை.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 2 ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.  நிதித்துறையை போலவே தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டது.  அதனால் அவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமித்தேன்.  நான் கொடுத்த பொறுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செய்து இருக்கிறார்.  ஐடி துறையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை.

இதையும் படியுங்கள் : சாலை விபத்தில் எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தெலங்கானாவில் சோகம்!

சென்னையில் 1000 வைஃபை ஹாட்ஸ்பாட் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.  புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்க புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.  வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மாற்றம் அல்ல மக்களின் வாழ்க்கை தரத்தில் காட்டுகிறோம்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags :
Advertisement