Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்?" - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
03:02 PM Oct 03, 2025 IST | Web Editor
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"கள்ளக்குறிச்சியில், திமுகவினர் விற்ற கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோனதே, அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றீர்களா?கொடுந்துயரத்திற்கு ஆளான வேங்கைவயல் மக்களைச் சென்று சந்தித்தீர்களா? தங்கள் விவசாய நிலங்களைப் பாதுகாக்கப் போராடிய திருவண்ணாமலை மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டீர்கள். அவர்கள் தலைமைச் செயலகம் வந்த போது, சந்திக்க மறுத்து காவல்துறையினரை வைத்து கைது செய்தது ஏன்?

தென்மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அல்லல்பட்டபோது, அவர்களுக்கு ஆறுதலாக இல்லாமல், இந்திக் கூட்டணி கூட்டம்தான் முக்கியம் என டெல்லிக்குப் போனது ஏன்? ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி “Not reachable” மோடில் இருக்கும் உங்களுக்கு, பாஜகவை விமர்சிக்கவோ, கேள்விகள் கேட்கவோ என்ன தகுதி இருக்கிறது? கட்சி தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரை ஒரு தேர்தலைக் கூட தனித்து நின்று எதிர்கொள்ளாத கட்சி திமுக.

கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் தான் விசாரணை ஆணையம் அமைத்துவிட்டீர்களே. எப்படி இருந்தாலும், இந்த விசாரணை ஆணையம் அமைத்தது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம், திருவாளர் “Not Reachable” முதலமைச்சரே?"

இவ்வாறு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiBJPDMKkarurMK StalintvkTVK Vijayvijay
Advertisement
Next Article