Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காணாமல்போன எருமை மாடு யாருக்குச் சொந்தம்? - வியத்தகு விசாரணை நடத்திய உத்தரப்பிரதேசம் போலீசார்!

09:14 PM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட எருமை மாடு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக போலீஸார் நடத்திய பஞ்சாயத்து தோல்வியில் முடிந்தது. அதையடுத்து இறுதியாக காவல்துறை கையிலெடுத்த புதிய யுக்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

காவல் நிலையங்களில் கொலை, திருட்டு, கொள்ளை, அடிதடி என மிகவும் சீரியசான பிரச்னைகள் மட்டுமே கையாளப்படுவதில்லை. சில நேரங்களில் சுவாரஸ்யமான, விநோதமான பிரச்னைகளும் கையாளப்படுகின்றன. அது போல ஒரு சுவாரஸ்யமான மற்றும் விநோதமான விவகாரம் ஒன்று தான் உத்தரப்பிரதேச மாநிலம் காவல் நிலைய போலீசாரால் கையாளப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அஸ்கரன்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நந்தலால் சரோஜ். இவர் விவசாயம் செய்தும், சொந்தமாக மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் மாடுகள் தினமும் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு, தானாக வீடு வந்து சேர்ந்துவிடுமாம். தினமும் இவ்வாறு நடந்துவர, கூட்டத்தில் ஒரு எருமை மாடு சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற நிலையில், அப்படியே வழிதவறி காணாமல் போய்விட்டது.

அன்று தன்னுடைய ஒரு எருமை மாடு வீட்டுக்கு வராததை கண்டறிந்த, நந்தலால் பதறிப்போனார். தான் பாசமாக வளர்த்த எருமை என்ன ஆயிற்றோ என்று கலங்கிப்போனார். தன்னுடைய எருமைகள் எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் தேடி அழைந்தார். ஆனால், எந்த பயனும் இல்லை. மாடு காணாமல் போன, அடுத்த 3வது நாள், பக்கத்து கிராமமான புரேரி ஹரிகேஷ் என்ற இடத்தில் தன்னுடைய எருமை மாடு இருப்பது நந்தலாலுக்கு தெரியவந்தது.

இதனால் அந்த கிராமத்துக்கு நேரடியாகவே கிளம்பி சென்ற நந்தலால் தன்னுடைய எருமையை அடையாளம் கண்டுகொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அதனை தன்னுடன் அழைத்துச்செல்ல முயன்றார். ஆனால், ஹனுமான் சரோஜ் என்பவர், அந்த எருமை மாடு தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தலால், ஹனுமானுடன் நீண்ட நேரம் வாக்கு வாதம் செய்தார். அந்த எருமை தன்னுடையதுதான் என்பதையும் புரியவைக்க முயன்றார்.

இறுதியாக ஹனுமான், "எருமையினை கொடுக்க முடியாது, அது என்னுடையது" என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாத நந்தலால், நேராக காவல் நிலையத்திற்கு சென்று, புகார் அளித்துள்ளார். உடனே ஹனுமானும், தான் பாடுபட்டு வளர்த்து வந்த எருமையை நந்தலால் கேட்பதாக கூறி, அதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 2 பேருமே எருமை மாடு தன்னுடையது என்று உரிமை கொண்டாடியதால் போலீசார் குழம்பி போனார்கள்.

எருமையின் உரிமையாளர் யார்? என்பதை போலீசாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு எப்படி தீர்வு காண்பது என்றும் தெரியாமல் போலீசார் விழித்தனர். பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை. இறுதியில் 2 விவசாயிகளும், சம்பந்தப்பட்ட எருமை மாடும் காவல் நிலையம் வரவைக்கப்பட்டது.

போலீசார், நந்தலால் மற்றும் ஹனுமான் இருவரையும் அழைத்து, அவரவர் கிராமத்திற்கு செல்லும் திசையை நோக்கி நிற்க வைத்தார்கள். இப்போது எருமை யார் பின்னால் செல்கிறதோ? அவரே எருமையின் உரிமையாளர் என்ற முடிவுக்கு வரலாம் என்று முடிவெடுத்தனர். அதன்படியே, எருமை மாட்டையும் நடுரோட்டில் விட்டனர்.

ஹனுமான், நந்தலால் இருவரையும் அவரவர் கிராமம் நோக்கி நிற்க சொன்னார்கள். அப்போது, நந்தலால் பின்னால் எருமை மாடு பழக்கதோசத்தில் சென்றுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த எருமை மாடு, நேராக நந்தலால் வீட்டுக்குள்ளும் நுழைந்தது. இதையடுத்து, நந்தலால் தான் எருமையின் உரிமையாளர் என முடிவு செய்யப்பட்டு, அவரிடமே எருமையை போலீசார் ஒப்படைத்துள்ளனர். நந்தலால் மிகவும் மகிழ்ச்சி. மாட்டுக்கு உரிமை கொண்டாடிய ஹனுமான் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
BuffaloinvestigationNews7Tamilnews7TamilUpdatesPoliceuttar pradeshViral
Advertisement
Next Article