Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி தேர்வு தொடர்பாக டெல்லி யூபிஎஸ்சி ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
01:20 PM Sep 26, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி தேர்வு தொடர்பாக டெல்லி யூபிஎஸ்சி ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
Advertisement

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். முன்னதாக தமிழக டிஜிபியாக யாரை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பாக ஒரு பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருந்தது.

Advertisement

அந்தப் பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னிய பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பெயர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி UPSC ஆய்வு செய்யும்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபி தேர்வு தொடர்பாக டெல்லி யூபிஎஸ்சி ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில், மாநில தலைமைச் செயலர் என். முருகானந்தம், மாநில உள்துறைச் செயலர் தீரஜ் குமார், தற்போதைய பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

யுபிஎஸ்சி சார்பில் அதன் தலைவர் அல்லது அவரால் முன்மொழியப்படும் ஆணையத்தின் உறுப்பினர், மத்திய உள்துறை செயலாளர் சார்பில் அத்துறையின் சிறப்புச் செயலர், மத்திய காவல் படைகளில் ஒன்றின் டிஜிபி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Tags :
ConsultationDelhimeetingNew DGPtamil naduUPSC
Advertisement
Next Article