தமிழகத்திற்கு 20.22 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவித்தரவிட்டது.
05:21 PM Sep 26, 2025 IST | Web Editor
Advertisement
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44வது கூட்டம் இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமை தாங்கினார்.
Advertisement
இதில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர், ஜே. ஜெயகாந்தன், ஐ.ஏ.எஸ்., சென்னையில் இருந்து காணொளி கான்பரன்சிங் மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் கர்நாடகா ,கேரளா மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து அக்டோபர் மாதத்திற்கு 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவித்தரவிட்டது.