For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த தமிழ்நாடு பிரபலங்கள்...

10:54 AM Dec 21, 2023 IST | Web Editor
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த தமிழ்நாடு பிரபலங்கள்
Advertisement

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பதவியை இழந்தவர்கள் பற்றிய விவரத்தை தற்போது பார்க்கலாம்...

Advertisement

  • 1991 முதல் 1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா,  தனது ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பின் காரணமாக அவர் தனது முதலமைச்சர் பதவியையும்,  ஸ்ரீரங்கம்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.
  • அதே கால கட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது ஊராட்சித்துறை அமைச்சராக இருந்த செல்வகணபதி,  தகர கொட்டகை ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.  சிபிஐ வழக்குகளை கையாளும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,  25 ஆயிரம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த செல்வகணபதி,  இந்த தண்டனையின் காரணமாக தனது பதவியை இழந்தார்.
  • 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இருப்பினும், மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை  30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
  • இதே போல்,  அதிமுக ஆட்சியின்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரா குமாரி,  15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அரசு நிதியை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எம்.பி, எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில்,  முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி,  அவரது கணவர் உட்பட 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.  இந்த வழக்கின் தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
  • அதே காலகட்டத்தில் கல்வி அமைச்சராக பதவி வகித்த பொன்னுசாமி மீது வருமானத்திற்கு அதிகமாக 77.49 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை தனி நீதிமன்றம்,  முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி மற்றும் அவரது குடும்பத்தார் 4 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது.  அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் பொன்னுசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
  • மேலும் தமிழகத்தை சேர்ந்த அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலவர வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்றதையடுத்து 2019-ஆம் ஆண்டு எம்எல்ஏ பதவியை இழந்ததால் அமைச்சர் பதவியில் இருந்தும் விலகினார்.
Tags :
Advertisement