மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக வரும் ஏப்.24ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் வேசான மழை பெய்ய வாய்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செய்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.