For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
07:55 PM May 07, 2025 IST | Web Editor
இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13ம் தேதி வாக்கில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை இன்று (மே 7) பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

Advertisement

குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நாளையும் (மே.8) நாளை மறுநாளும்(மே.9) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி
தர்மபுரி
வேலூர்
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
கடலூர்
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
தேனி
தென்காசி
மதுரை
விருதுநகர்
தூத்துக்குடி
கன்னியாகுமரி
திருநெல்வேலி

லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நீலகிரி
கோயம்புத்தூர்
ஈரோடு
திண்டுக்கல்
ராணிப்பேட்டை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
சேலம்
சிவகங்கை

Tags :
Advertisement