For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி !

காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
12:39 PM Aug 06, 2025 IST | Web Editor
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு  எடப்பாடி பழனிசாமி
Advertisement

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?

Advertisement

திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன.

காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதலமைச்சர்?
விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே!

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே! மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement