For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'வீர தீர சூரன்' ரிலீஸ் எப்போது? - ரூ.7 கோடி பணத்தை செலுத்த 48மணிநேரம் நீதிமன்றம் கெடு!

வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட 4வாரத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
01:36 PM Mar 27, 2025 IST | Web Editor
 வீர தீர சூரன்  ரிலீஸ் எப்போது    ரூ 7 கோடி பணத்தை செலுத்த 48மணிநேரம் நீதிமன்றம் கெடு
Advertisement

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுநீள ஆக்ஷன் திரைப்படமான இது ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைதான் தற்போதுதான் முதலில் வெளியிடுகிறார்கள்.

Advertisement

இந்த சூழலில் இன்று வெளியாக இருந்த இந்த படத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பி4யு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பி4யு என்ற நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஓடிடி உரிமத்தை பி4யு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால், ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக டெல்லி  உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று (மார்ச் 27) காலை 10.30 மணிவரை வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

இதனால், வெளிநாடுகளில் இன்று வெளியாகவிருந்த வீர தீர சூரன் திரைப்படத்தின் காட்சிகளும், தமிழகத்தில் காலை 9 மணி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று காலை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளனர். விசாரணையில் இருதரப்புக்கும் உடன்பாடு எட்டப்பட்டால், படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கும் எனவும் நீதிமன்றம் அனுமதி வழங்கும் பட்சத்தில் பகல் 12 மணிக்கு திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தை மீறி 'வீர தீர சூரன்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக ஐ.வி.ஒய் என்டர்டையின்மன்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதி மன்மீத் பிரீத்தம் சிங் அரோரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் 7 கோடி பணத்தை 48 மணி நேரத்தில் டெப்பாசிட் செய்ய வேண்டும் எனவும் பணம் விவகாரம் கொடுத்து முடிக்கப்பட்டதா என்பதை கண்காணித்து உறுதிபடுத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags :
Advertisement