சூர்யா 45 டைட்டில் வெளியீடு எப்போது? - போஸ்டருடன் அப்டேட் பகிர்ந்த படக்குழு!
நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே கடந்தாண்டு ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் சூர்யாவின் 45வது படத்தை தயாரிப்பதாக அறிவித்தது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து நட்டி, யோகி பாபு, சுவாசிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், இப்படம் தொடர்பான அறிவிப்புகள் ஏதும்நீண்ட நாட்கள் வெளியாகமல் இருந்தன.
Gear up! The wait ends tomorrow 🔥 #Suriya45 title reveal at 10 AM. @Suriya_offl @trishtrashers #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl #SupreethReddy #AnaghaMayaRavi @dop_gkvishnu #VikramMor @kalaivananoffl #ArunVenjaramoodu @SaiAbhyankkar @RJ_Balaji @prabhu_sr pic.twitter.com/XNshxPf4PE
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 19, 2025
இந்த நிலையில் சூர்யாவின் 45வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கான டைட்டில் அறிவிப்பு நாளை(ஜூன்.20) காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.