#Vidaamuyarchi டிரெய்லர் எப்போது? வெளியான தகவல்!
விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் புத்தாண்டை முன்னிட்டு இன்று நள்ளிரவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்குடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான Sawadeeka (சவதீகா) என்ற பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்பாடல் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரெயலர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டை முன்னிட்டு இன்று நள்ளிரவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.