அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கள் எப்போது?
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படக்குழு படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
நடிகர் அஜித் மற்றும் நடிகை த்ரிஷா 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. மங்காத்தா திரைப்படத்திற்கு பின் அஜித், த்ரிஷா மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. இவர்கள் மூவரும் இணைத்து நடித்து இருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரூ.200 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிந்து வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இன்று படக்குழு டிச.27 அன்று இப்படத்தின் முதல் பாடலை வெளியாகும் என தகவல் வெளியீட்டு உள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் ஜன.1, 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அதிரடி திரில்லர் படம் என்றும் இது ஹாலிவுட் த்ரில்லர் பிரேக்டவுன் படத்தின் ரீமேக் என்பதும் குறிப்படத்தக்கது. இப்படத்தின் தயாரிப்பாளர் பிரேக்டவுன் தயாரிப்பாளர்களிடமிருந்து படத்தின் உரிமையைப் பெற்றுள்ளார்.