For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

KGF - 3 எப்போது? அப்டேட் கொடுத்த நடிகர் #Yash!

07:06 PM Oct 23, 2024 IST | Web Editor
kgf   3 எப்போது  அப்டேட் கொடுத்த நடிகர்  yash
Advertisement

கேஜிஎஃப் - 3 திரைப்படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப், கே.ஜி.எப் 2 படங்களின் மூலம் பிரபலமானவர் யாஷ். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததுடன், வசூலையும் வாரி குவித்தது. இதனைத் தொடர்ந்து யாஷ் தனது 19வது படமான டாக்சிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் யாஷ் 'கே.ஜி.எப் 3' மற்றும் 'ராமாயணம்' படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,

"கேஜிஎஃப் - 3 திரைப்படம் எப்போது வரும் என பலரும் என்னிடம் கேட்டு வருகின்றனர். இப்படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சரியான நேரம் வரும்போது அது நிகழும். தற்போது டாக்சிக் மற்றும் ராமாயணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். 'ராமாயணத்தில், 'வேறு கேரக்டரில் நடிப்பீர்களா?' என்று என்னிடம் கேட்டிருந்தால், இல்லை என்றிருப்பேன். ராவணன் மிகவும் கவர்ச்சிகரமான கதாபாத்திரம். ஒரு நடிகனாக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்."

இவ்வாறு நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement