For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Karthi-ன் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!

03:44 PM Oct 16, 2024 IST | Web Editor
 karthi ன் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் எப்போது  வெளியான புதிய தகவல்
Advertisement

'வா வாத்தியார்' திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவரது நடிப்பில் கடந்த செப்.27ஆம் தேதி வெளியான 'மெய்யழகள்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் இரு ஆண்களின் பழைய நினைவுகளை கூறும் விதமாக அமைந்துள்ளது.

இதனிடையே கார்த்தியின் 26வது படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். கார்த்தியின் 26 வது படத்துக்கு 'வா வாத்தியார்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இத்திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement