For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கமல்ஹாசனின் #Thuglife ரிலீஸ் எப்போது?

06:43 PM Oct 26, 2024 IST | Web Editor
கமல்ஹாசனின்  thuglife ரிலீஸ் எப்போது
Advertisement

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34 ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. சென்னை, டெல்லி, ரஷ்யா, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் திரைப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : முதன்முறையாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து அணி சாதனை! 12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி!

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு காலில் காயம் ஏற்பட, முக்கியக் காட்சிகளை எடுப்பதில் தாமதமானது. இறுதியாக, சில நாட்களுக்கு முன் முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வெளியீடு தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘தக் லைப்’ திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement