For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Devara ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

03:36 PM Oct 24, 2024 IST | Web Editor
 devara ஓடிடி ரிலீஸ் எப்போது  வெளியான அப்டேட்
Advertisement

ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் நவ.8 ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள திரைப்படம் ‘தேவரா’. இந்த படம் ஜூனியர் என்டிஆரின் 30வது திரைப்படமாகும். இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த செப்.27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தேவரா திரைப்படம் நவம்பர் மாதம் 8 ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

Tags :
Advertisement