ஜேடன் புரொடக்ஷன்ஸின் 'கலாம் நம்பிக்கை விருதுகள்; 65 சாதனையாளர்களுக்கு கெளரவம்!
கடந்த ஒன்பது ஆண்டுகளாக, ஜேடன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது.
கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், சமூகச் செயல்பாடு, சமூக சேவை, அழகியல் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) என எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைக்கும் பலருக்கும் 'கலாம் நம்பிக்கை விருது' என்ற பெயரில் கவுரவம் வழங்கப்பட்டு வருகிறது. இது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உத்வேகமான கனவுகளையும், இளைஞர்களுக்கு அவர் அளித்த நம்பிக்கையையும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு, மொத்தம் 65 சாதனையாளர்களுக்கு 'கலாம் நம்பிக்கை விருது' வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை மேலும் சிறப்பிக்க, 30க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சாதனையாளர்களை கெளரவிக்கவுள்ளனர்.
இந்த விழாவில் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், பா.ம.க. பொருளாளர் திலகபாமா, பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, சட்டமன்ற உறுப்பினர்களான பிரபாகர் ராஜா மற்றும் அசன் மௌலானா, பா.ஜ.க. பொதுச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, த.வெ.க. துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், தி.மு.க. ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி போன்ற அரசியல் பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
இவர்களுடன், பிரபல இயக்குநர் கோபி நயினார், ஐ.ஆர்.எஸ். அதிகாரி நந்தகுமார், பத்திரிக்கையாளர்களான அமிர்தம் சூர்யா, செந்தில்வேல், உதயசூரியன், ஆவுடையப்பன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். திரைக்கலைஞர்களான நளினி, ரேகா, லிங்கேஷ், காதல் கண்ணன், வினோத் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பு சேர்க்க உள்ளனர்.
மேலும், தொழிலதிபர்களான தேவசேனா, ரமேஷ், பேரூர் ஹரிஹரன் சுரேஷ், சம்சுல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, சாதனையாளர்களைப் பாராட்ட உள்ளனர்.
இந்த பிரமாண்ட விருது வழங்கும் விழா, நாளை ஜூலை 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு, மாலை மலர் வளாகத்தில் உள்ள முகுந்த் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது. இது, பல்வேறு துறைகளில் இயங்கும் சாதனையாளர்களுக்கு ஒரு சிறந்த அங்கீகார மேடையாகவும், புதிய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.