For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சரோஜாதேவியை கடைசியாக சந்தித்தபோது - இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு!

மறைந்த நடிகை சரோஜாதேவி , கடைசியாக தமிழில் நடித்த படம் ஆதவன். அந்த படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார்.
09:56 PM Jul 15, 2025 IST | Web Editor
மறைந்த நடிகை சரோஜாதேவி , கடைசியாக தமிழில் நடித்த படம் ஆதவன். அந்த படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார்.
சரோஜாதேவியை கடைசியாக சந்தித்தபோது   இயக்குனர் கே எஸ் ரவிகுமார் பேச்சு
Advertisement

Advertisement

மறைந்த நடிகை சரோஜாதேவி , கடைசியாக தமிழில் நடித்த படம் ஆதவன். அந்த படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார். அவர்

காக்கா முட்டை விக்னேஷ் மற்றும் இயக்குனர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சென்ட்ரல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கலந்து கொண்டார். பின்னர் சரோஜாதேவி நினைவுகள் குறித்து பேசினார்.

சரோஜாதேவியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்ஸ்மோர் திரைப்படத்திற்கு பிறகு சரோஜா தேவி தமிழில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு ஆதவன் படத்தில் அவரை தொல்லை பண்ணி நடிக்க வைத்தேன். அதுதான் அவர்களுக்கு தமிழில் கடைசி படம் என்று அப்போ எனக்கு தெரியாது அந்த படம் வெளிவந்து கூட 12 வருடங்களுக்கு மேல் ஆகிறது..

ஆதவன் படத்தில் அற்புதமான ஒத்துழைப்பு கொடுத்தார். அவரை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

வணக்கம் டைரக்டர் சார் ஆரம்பிச்சிட்டீங்களா, சாரி கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் என்று ஆதவன் படப்பிடிப்பு தளத்தில் ஈகோ இல்லாமல் பேசுவார்.

சரோஜாதேவி தனது மேக்கப்பில் அவ்வளவு அக்கறையாக இருப்பார். ஆதவன் திரைப்படத்தில் சரோஜாதேவியின் மகன் இறந்தது போல ஒரு காட்சி படமாக்கப்பட்ட பொழுது மேக்கப் குறைக்க சொல்லி கேட்டோம் அதற்கு கூட இதுக்குமேல் குறைக்க முடியாது என அதற்கும் ஒரு காரணம் சொன்னார்.

என் வீட்டிற்கு வரும் தயாரிப்பாளர்களோ இயக்குநர்களை வந்தால் கூட மேக்கப் உடன் தான் இருப்பேன் என்றார்.

அவர் கூறிய அந்த அனுபவங்களை படத்தில் வடிவேலை வைத்து நகைச்சுவையாக எடுத்திருந்தோம். அந்த காட்சியை பார்த்துவிட்டு என்னை கிண்டல் செய்கிறீர்களா என கேட்டார் அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது..

நான் அவர்களை கடைசியாக அர்ஜுனன் மகள் திருமணத்தில் தான் பார்த்தேன் அப்பொழுது கூட நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம் அப்போதே அவருக்கு முடியாமல் தான் இருந்தது ஆனால் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கர்நாடகாவில் இருந்து சென்னை வந்து செல்வார்..

மறக்க முடியாத நபர் அவர் இன்றைக்குமே அவருடைய படங்கள் பாடல்களைப் பார்த்தால் யாராலும் மறக்க முடியாது..

வாழ்க்கை என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்தான். இன்னும் வேண்டுமென்றால் அவர்களை மேலே சென்று தான் சந்திக்க வேண்டும் என கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.

Tags :
Advertisement