For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போலி படங்களை பயன்படுத்தி வாட்ஸ்ஆப்-பில் மோசடி...எச்சரிக்கை விடுத்த காவல்துறை...

04:33 PM Dec 07, 2023 IST | Web Editor
போலி படங்களை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் பில் மோசடி   எச்சரிக்கை விடுத்த காவல்துறை
Advertisement

வாட்ஸ்ஆப் உள்ளிட்ட செயலிகளில், புதிய எண்களில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, அவர் நமக்குத் தெரிந்தவர் தான் என்று நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என சைபர் பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில், இந்த ஆண்டில் நடந்த அதிகபட்ச சைபர் குற்றங்கள் சென்னையில் தான் பதிவாகியிருப்பதாகவும்,  அடுத்த இடங்களில் தாம்பரமும் ஆவடியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பதிவான ஒட்டுமொத்த சைபர் குற்றங்களில் 21% குற்றங்கள் சென்னை மாநகரத்திலிருந்து பதிவாகியுள்ளது. சைபர் குற்றங்கள் நடந்தால் 1930 தொலைபேசி எண்ணில் அழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை அசோக் நகரில் இயங்கும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு 2,32,000 பேர் இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாடு முழுவதுமிருந்து அழைத்து புகார்களைப் பதிவு செய்துள்ளனர். இதில் 30,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் புகார் அளித்தவர்கள் 6,500 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னைக்கு அடுத்தடுத்த இடங்களில் தாம்பரம் 3000 வழக்குகளுடனும், ஆவடி 2,200 வழக்குகளுடனும் உள்ளன.

சென்னையில் சைபர் கிரைம் மூலம் மோசடி செய்யப்படும் பணம் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்களில் பணமாக எடுக்கப்படுவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால், சைபர் க்ரைம் மூலம் மோசடி செய்யப்படும் பணத்தை திரும்பப் பெறுவதும் கடினம் என தெரிவித்துள்ளனர்.

ஒரு மோசடி இப்படி நடக்கிறது என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுமே, மோசடியாளர்கள் புதிய வகையான மோசடியை கண்டுபிடித்துவிடுகிறார்கள். சில மோசடியாளர்கள், வாட்ஸ்அப் அடையாள படங்களை திருடி அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. புதிய செல்போன் எண்களிலிருந்து அழைப்பு வரும்போது, வெறும் படங்களை வைத்து அந்த எண் அவர்களுடையது என யாரும் நம்ப வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags :
Advertisement