For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2023ல் 7 கோடிக்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்ஆப் தடை செய்துள்ளது - மெட்டா தகவல்

02:10 PM May 03, 2024 IST | Web Editor
2023ல் 7 கோடிக்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்ஆப் தடை செய்துள்ளது   மெட்டா தகவல்
Advertisement

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது என்று மெட்டா வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Advertisement

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 சட்டத்தின் விதி 4 (1)(d) இன் கீழ் வெளியிடப்பட்ட இந்தக் கணக்குகள் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட குறைகள் மற்றும் இந்தியச் சட்டங்களை மீறும் கணக்குகள் அல்லது வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகள் மற்றும்  புகார்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 1, 2023 முதல் நவம்பர் 30, 2023 வரை, WhatsApp மூலம் தடைசெய்யப்பட்ட மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 69,307,254 ஆக இருந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் டிசம்பர் 2023க்கான தரவுகளை உள்ளடக்கவில்லை, எனவே தடைசெய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளின் எண்ணிக்கை ஏழு கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கணக்குகளில் இரண்டு கோடிக்கும் அதிகமான கணக்குகள் பயனர்கள் புகாரளிப்பதற்கு முன்பே தடை செய்யப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு, பல்வேறு காரணங்களுக்காக வாட்ஸ் ஆப் பயனர்களிடமிருந்து 79,000 க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நிறுவனம் 2,398 கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

Tags :
Advertisement