மாணவர்கள் பள்ளியின் #Toiletஐ சுத்தம் செய்வதில் என்ன தவறு - பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு!
பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வதில் என்ன தவறு பாஜக எம்பி பேசியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பாஜக எம்பி ஒருவர் பள்ளி மாணவர்கள் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்திரதுர்கா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவைச் சார்ந்த கோவிந்த் கர்ஜோல் . இவரது சமீபத்திய பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியா முழுவது பள்ளிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆசிரியர் தின நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம்பி கஜ்ரோல் பேசும்போது சமீப காலமாகப் பள்ளியில் மாணவ மாணவிகள் கழிவறை சுத்தம் செய்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு கண்டனங்களை பெற்று வருகிறது. மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் எந்த வித தவறும் இல்லை.
ஜப்பான் நாட்டில் மாணவர்களும் ஆசிரியர்களும் கழிவறையை சுத்தம் செய்கின்றனர். நான் படிக்கும் சமயத்தில் பள்ளியின் விடுதியை பெருக்கி சுத்தம் செய்திருக்கிறேன். மாணவனின் கையில் ஆசிரியர் துடைப்பத்தை கொடுப்பதை குற்றமாக கூறினால், சுத்தம் செய்யும் வேலை என்பது கீழான செயல் என்று மாணவனுக்கு எண்ணம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பியின் இந்த கருத்து பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்கள் சுத்தத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் அதேவேளையில் அது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களோ, அல்லது மாணவிகள் மட்டும் செய்ய வேண்டிய வேலையாகவோ இருக்கக்கூடாது. பள்ளியை சுத்தம் செய்யும் விசயத்தில் சாதி மத பாகுபாடு பார்க்கும்போதுதான் அது குற்றமாகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறனர்.