“புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் - தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் என்ன சொல்லப்போகிறார்கள்?” - செல்வப்பெருந்தகை கேள்வி
பாஜக ஆளாத மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான சிறு குற்றங்கள் நடந்தால் கூட உடனடியாக குரல் கொடுக்கும், தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் போன்றவர்கள் புதுச்சேரி சிறுமி கொலை சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் 4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமியை சமூகவிரோதிகள் சிலர் கொடூரமாகக் கொன்று கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கடையில் வீசி சென்றுள்ளார்கள். குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வன்முறை சம்பவம் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இச்சம்பவத்தால் புதுச்சேரியில் தற்போது நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதற்குக் காரணமானவர்களை கடுமையாகத் தண்டிக்கவேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டிலோ அல்லது பாஜக ஆளாத மாநிலங்களில் பெண்களுக்கு ஏதேனும் சிறிய அளவில் குற்றம் இழைக்கப்பட்டால் உடனடியாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் தேசிய பாஜக மகளிர் தலைவர் வானதி சீனிவாசன் போன்றவர்கள் உடடியாக குரல் கொடுப்பார்கள். இச்சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
மேலும், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தும். ஆனால், புதுச்சேரி நடைபெற்ற மிகவும் வேதனையான சம்பவத்தை கேள்விப்பட்டும் சம்மந்தப்பட்ட ஆணையங்கள் வாய் மூடி மௌனமாக இருப்பது ஏன்?
புதுச்சேரியில்4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமியை சமூகவிரோதிகள் சிலர் கொடூரமாகக் கொன்று கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கடையில் வீசி சென்றுள்ளார்கள். குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வன்முறை சம்பவம் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இச்சம்பவத்தால் புதுச்சேரியில் தற்போது நிலைமை…
— Selvaperunthagai K (@SPK_TNCC) March 6, 2024