For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரசாரத்துக்குப் பின் என்ன செய்வேன்? - ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ!

04:19 PM May 19, 2024 IST | Web Editor
பிரசாரத்துக்குப் பின் என்ன செய்வேன்    ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ
Advertisement

ராகுல் காந்தியின் புத்துணர்ச்சிக்கு என்ன காரணம்? என்பதையும் தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு என்ன செய்வேன் என்பதையும் அவர் காணொலி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும் (நாளை), 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த வகையில், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரசாரப் பேரணியை நிறைவு செய்த பின், டெல்லியில் உள்ள ஒரு சாதாரண உணவகத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு உணவருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்ளுடன் இணைந்து,  'சோலே பாதுரே' ஆர்டர் செய்து சாப்பிட்டார். இது தொடர்பான காணொலி இணையத்தில் வெளியானது. தற்போது, இந்த காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : பாஜக தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் – டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்!

அதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது :

"ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணிக்குப் பின், சிறு ஓய்வு, நாவில் எச்சில் ஊற வைக்கும் 'சோலே பாதுரே' உடன்.  இது டெல்லியின் தவிர்க்க முடியாத அடையாளம்.
டெல்லியைக் குறித்து எனக்கு பிடித்த விஷயம் இது தான்,. பல அரசியல் பரபரப்புக்கு இடையிலும் இவை எப்போதும் அழகாகத் தெரிகிறது"

இவ்வாறு இந்த காணொளியில் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement