For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சட்டசபையில் மீனவர்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன வெளியானது?

10:34 PM Jun 22, 2024 IST | Web Editor
சட்டசபையில் மீனவர்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன வெளியானது
Advertisement

சட்டசபையில் மீனவர்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன வெளியானது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Advertisement

தமிழ்நாட்டின் பல்வேறு மீனவர் பகுதிகளில் இறங்கு தளங்கள், தூண்டில் வளைவுகள் அமைப்பதற்கான அறிவிப்புகளை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தமிழ்நாடு சட்டசபையில் வெளியிட்டார். ரூ5 கோடியில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு 200 செயற்கைகோள் தொலைபேசிகள் வாங்கிட 40% மானியம் வழங்கப்படும். ரூ.5 கோடியில் நாகப்பட்டினம் மாவட்டம், செருதலைக்காடு மீனவ கிராமத்திலுள்ள மீன்பிடி இறங்கு தளம் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:

ரூ.19 கோடியில் செங்கல்பட்டு மாவட்டம், கானத்தூர் ரெட்டி குப்பத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கப்படும். ரூ.32 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடி மீன் இறங்குதளத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு நண்டலார் ஆற்றின் முக துவாரத்தினை தூர்வாரி தடுப்பு சுவர் அமைத்தல் ரூ.52 கோடியில், கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி தெரு & பள்ளம்துறை மீன் இறங்குதளங்களில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ.5 கோடியில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு 200 செயற்கைகோள் தொலைபேசிகள் வாங்கிட 40% மானியம் வழங்கப்படும். ரூ.14.20 கோடியில் மீன்களைத் தரமாகவும், சுகாதாரமாகவும் வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்ல ஏதுவாக குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் வாங்கப்படும்.

ரூ.37 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் மீனவ கிராமத்தில் படகு அணையும் தளம் அமைத்தல்.

ரூ.15 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், கீழமூவர்கரை மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் கரையோர உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம், ஏரிப்புறக்கரை கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைத்தும் & கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் தடுப்பு சுவர் அமைத்து மீன் இறங்கு தளத்தில் கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்படும். ரூ.38 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் விவேகானந்தர் நகரில் மீன் இறங்குதளம் அமைத்தல் & பெரியதாழை மீன் இறங்குதளத்தில் தூண்டில் வளைவு நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.39.88 இலட்சத்தில் கடலோர கிராமங்களில் வசிக்கும் 222 மீனவ மகளிர் மாற்று வாழ்வாதார தொழிலாக கடற்பாசி வளர்ப்பினை மேற்கொள்ள திட்டம். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 11 மீனவ கிராமங்களில் ரூ.8.50 கோடியில் வடிகால் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.30 கோடியில், கடலூர் மாவட்டம், சாமியார் பேட்டை மீன் இறங்குதளத்தில், தூண்டில் வளைவுடன் கூடுதல் வசதிகள் & முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ.25 கோடியில், இராமநாதபுரம் மாவட்டம், சின்ன ஏர்வாடி மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு & வலைபின்னும் கூடம் அமைக்கப்படும். விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார் சாவடியில் ஒருங்கிணைந்த மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும். ரூ.12 கோடியில், சென்னை மாவட்டம், பாரதியார் நகரில் புதிய மீன் இறங்குதளமும் & திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.

Tags :
Advertisement