Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தலில் போட்டியிட அழைத்த டி.கே.சிவக்குமார் - சிவ ராஜ்குமார் சொன்ன பதில் என்ன..?

07:53 AM Dec 12, 2023 IST | Jeni
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சிவ ராஜ்குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவரது மனைவி கீதா சிவ ராஜ்குமார், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதேபோல் சிவ ராஜ்குமாரின் மைத்துனர் மது பங்காரப்பா, கர்நாடக கல்வி அமைச்சராக பணியாற்றி வருகிறார். இதனால் சிவ ராஜ்குமாரும் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என அரசியல் வட்டாரங்கள் முணுமுணுத்து வந்தன.

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற சமூக மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எந்த மக்களவைத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுங்கள் என சிவ ராஜ்குமாரிடம் கேட்டுள்ளேன். ஏனெனில் அவர் லோக் சபா செல்ல இது சரியான நேரம். உங்களின் வீட்டு வாசலுக்கு வந்திருக்கும் வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள் என்றும் கூறியுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

இதுகுறித்து பேசிய சிவ ராஜ்குமார், “கலர் பூசிக்கொண்டு நடித்து, உங்களின் மனதில் இடம்பெறுவதுதான் என் தந்தை எனக்குக் கொடுத்த பரிசு. அதோடு என் எல்லையும் முடிகிறது. நான் உங்களோடு இருந்து, உங்களுக்காக நடிப்பேன். அரசியலில் சிறப்பாக வேலை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும், நான் அரசியலுக்கு வருவதை என்னுடைய மனைவியோ, மைத்துனரோ விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
cinemaCongressDKShivakumarElectionKarnatakaPoliticsshivarajkumar
Advertisement
Next Article