சிறப்பு தொகுப்பு வேண்டாம்.., ஜிஎஸ்டி பாக்கியை கொடுங்கள்..,- பஞ்சாப் முதல்வர்!
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் இந்த ஆண்டு அதிக அளவு பருவமழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் மதிப்பீட்டின் படி முதற்கட்டமாக 13,800 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் பஞ்சாப் வெள்ளப்பதிப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி நிவாரணத்தொகையாக1600 கோடி ரூபாய் அளித்துள்ளார். 12 ஆயிரம் கோடி ரூபாயை SDRF கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்த பஞ்சாப் அரசிற்கு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் வெள்ளபாதிப்புக்கான மத்திய அரசின் நிவாரணத்தொகை குறித்து அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் அவர்,
”1,600 கோடி ரூபாய்க்கு என்ன செய்வது? தொடக்க இழப்பு 13,800 ரூபாய். 1600 கோடி ரூபாய் என்பது கடலின் ஒரு துளிதான். பஞ்சாப் மாநிலம பயன்படுத்தி வந்த ஆர்டிஎஃப் நிதி எந்தவித காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. பாஜக அல்லாத அரசாங்க மாநிலத்தில் வழக்கமானது. SDRF கணக்கு 2010/11-ல் உருவாக்கப்பட்டது. அப்போது பஞ்சாப் மாநிலம் 84 கோடி ரூபாய் பெற்றது. ஆனால், 184 ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2011/12-ல் 171 கோடி ரூபாய் பெறப்பட்டது. 159 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அதேபோல் 2012/13 மத்திய அரசு 272 கோடி ரூபாய் அனுப்பியது. 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2013/14-ல் 194 கோடி ரூபாய் பெற்ற நிலையில், 236 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. மொத்தமாக பஞ்சாப் மாநிலம் 5012 ரூபாய் பெற்றுள்ளது. அதிலிருந்து எஸ்டிஆர்எஃப் 3820 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் மறைக்க ஒன்றுமில்லை. அதில் 1200 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்த ரூ.12,000 கோடி எங்கிருந்து வந்தது? பாஜக உண்மையான தொகையுடன் ஒரு பூஜ்ஜியத்தைச் சேர்த்துள்ளது” என்றார்.
மேலும் அவர், ”சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் பஞ்சாபின் ரூ.50,000 கோடியை மத்திய அரசு செலுத்தவில்லை. "இதை மட்டும் எங்களுக்குக் கொடுங்கள்... மத்திய அரசிடமிருந்து எந்த சிறப்பு தொகுப்பு தேவையில்லை. இந்தத் தொகையிலிருந்து எங்கள் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை நாங்கள் நிர்வகிப்போம்” என்று தெரிவித்தார்.