நாடாளுமன்ற தேர்தலில் தமிழக நிலவரம் என்ன? டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது!
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அடுத்தடுத்து வரும் கருத்து கணிப்புகளில் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆட்சிகாலம் நிறைவடைவதை ஒட்டி இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான INDIA – கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை INDIA – கூட்டணி திமுக தலைமையில் களம் இறங்குகிறது.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் திமுக கூட்டணி கிட்டதட்ட கிளீன் ஸ்வீப் செய்யும் அளவுக்கு பெரும் வெற்றியை பெறும் எனக் கூறியுள்ளது.
டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் வருமாறு:
தமிழ்நாடு மொத்த தொகுதிகள்: 39
திமுக கூட்டணி - 36
அதிமுக - 02
பாஜக - 01
இவ்வாறு டைம்ஸ் நவ் கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.