தமிழ்நாடு அரசிடம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்தை பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது.
இந்நிலையில், இங்கு சுமார் 500 மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி 2028 ஆம் ஆண்டுக்குள் தனியார் தேயிலை நிறுவனத்தை காலி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள் : காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹரியானா முன்னாள் தலைவர்கள்!
ஆனால், குத்தகை ஒப்பந்த காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் நிலையில், முன்னதாகவே தேயிலை தோட்டத்தை காலி செய்ய பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் முடிவு செய்து, தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறது. தங்களுக்கு எந்தவித மறுவாழ்வு நடவடிக்கையும் செய்து தரவில்லை என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசிடம் சில கோரிக்கைகளை விடுத்துள்ளனர். அதன்படி, மாஞ்சோலையைச் சேர்ந்த 700 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கலைஞர் நினைவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர வேண்டும் என தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.