For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Exit Poll முடிவுகள் எனப் பரவும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - Logically Facts கூறுவது என்ன?

08:26 AM Jun 02, 2024 IST | Web Editor
exit poll முடிவுகள் எனப் பரவும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்   logically facts கூறுவது என்ன
Advertisement

This news fact checked by Logically Facts

Advertisement

மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்த நிலையில் நேற்று மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. ஆந்திர மாநிலத்திற்கான கருத்துக்கணிப்புகள் என சில தகவல்கள் முக்கிய செய்தி ஊடங்களில் வெளியானது. இதன் உண்மைத் தன்மை குறித்து லாஜிகலி ஃபேக்ட்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

தேர்தலுக்கு பிந்தை கருத்துக் கணிப்புகள்

நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

ரிபப்ளிக் டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி,

  • பாஜக தலைமையிலான ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 353 - 368 இடங்கள்,
  • காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ --> 118 - 133 இடங்கள்,
  • இதர கட்சிகள் --> 43 - 48 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேல் இடங்களை பெறும் என தெரிவித்துள்ளன.

ஆந்திர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ( தெலுங்கு தேசம் , ஜனசேனா கட்சி) ஆகியவை அதிக இடங்களை பெறும் என பெரும்பாலான இடங்களை பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதேபோல ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சொற்ப இடங்களை மட்டுமே பெறும் எனவும் இந்தியா கூட்டணி ஒரு இடத்தை கூட பெறாது எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

Exit Poll என பரவும் பழைய செய்தி அறிக்கைகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவும் எனவும் சொற்ப இடங்களை மட்டுமே பெறும் எனவும் கருத்துக் கணிப்புகள் அடங்கிய ABC - C Voterன் கருத்துக் கணிப்பு முடிவுகள் அடங்கிய ஸ்கிரீன் ஷாட்   ஒன்றை எக்ஸ் தள பயனர்கள் பலர் பகிர்ந்து வந்தனர்.

ABP-CVoter கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜூன் 1ம் தேதி மாலை  வெளியிடப்படுவதற்கு முன்பு, சமூக ஊடக பயனர்களின் சிலர் ஜூன் 1 ஆம் தேதி பிற்பகலில் பகிர்ந்தனர். ஏழு கட்டங்களிலும் வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, ஜூன் 1, 2024 அன்று மாலை 6:30 மணிக்குப் பிறகு கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ( இங்கே காப்பகப்படுத்தப்பட்டுள்ளது ) வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சமூக வலைதளங்களில் வெளியான ஸ்கிரீன் ஷாட்டை ஆய்வு செய்ததில் அது   ஏப்ரல் 16, 2024 அன்று ஏபிபி நியூஸ் தனது இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது என்பதை Logically Facts கண்டறிந்தது. இவை மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு முன் நடத்தப்பட்ட  தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளாகும்.

சமூக வலைதளங்களில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் அடங்கிய ஸ்கிரீன் விவரங்கள் ஓரளவு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைப் போல  இருந்தாலும் அவை தேர்தலுக்கு முந்தையது என்பது நிரூபணமாகியுள்ளது.

முடிவு:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆந்திர மாநிலத்திற்கான கருத்துக்கணிப்புகள் என சமூக வலைதளங்களில் பரவும் ஸ்கிரீன் ஷாட்டுகள் தற்போதையது அல்ல மாறாக அவை தேர்தலுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

Note : This story was originally published by Logically Facts and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Advertisement